ஊட்டி. ஜன. 02
தென்னிந்திய தாயகம் திரும்பியோர் மேம்பாட்டு சங்கம்,
அனைத்திந்திய தாயகம் திரும்பியோர் நல சங்கம்,
தாயகம் திரும்பியோர் நல சங்கம்
ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட
ரெப்கோ வங்கி ஊழல்
எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில்
ஊடகவியலாளர்கள் சந்திப்பு
கூடலூர் ஜானகி அம்மாள்
திருமண அரங்கில்
ஒருங்கிணைப்பாளர்
சு. ஆனந்தராஜா தலைமையில்
நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு
மலையக தாயகம் திரும்பியோர்
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்
பழனிச்சாமி,
உலகத் தமிழர் பேரியக்க
பொதுச் செயலாளர்
ஆனந்த்,
மலையக மக்களுக்கான
ஜனநாயக இயக்க
ஒருங்கிணைப்பாளர்
மு.சி. கந்தையா,
யோகேஸ்வரன்,
பூபாலன்,
. தட்சிணாமூர்த்தி ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைப்பாளர்கள்
சு. ஆனந்தராஜா,
மு.க. முருகன்,
இராமேஸ்வரன்,
ஆகியோர்
ரெப்கோ ஹோம்
பைனான்ஸ் நிறுவனம்
நீலகிரி மாவட்டம்
கூடலூர், பந்தலூர்
வட்டங்களில்
12 பள்ளிகளில்
கழிப்பறைகள் கட்ட வழங்கிய
சி.எஸ்.ஆர்.ஃபண்டு
சுமார் ரூபாய்
ஒரு கோடியே 25 லட்சம்
நிதியில் நடைபெற்ற
ஊழல்கள் குறித்து
ஊடகவியலாளர்களிடம் விளக்கினர்.
பள்ளி தலைமை ஆசிரியர்களிடம்
வழங்கப்பட்ட காசோலைகளை
ரெப்கோ வங்கி பேரவை
பிரதிநிதிகள்
கணேசன்,
கலைச்செல்வன்
ஆகியோர்
ஒப்பந்ததாரர். மணிகண்டன் உடன் சென்று
காசோலைகளை
பணமாக மாற்றி
பள்ளி தலைமை
ஆசிரியர்களிடமிருந்து அபகரித்து
சென்றுள்ளனர்.
விதிமுறைகளை பின்பற்றாமலும்
உயர் அலுவலர்களிடம்
தகவல்களை தெரிவிக்காமல்
மறைத்தும்
பள்ளி மேலாண்மைக் குழுவை கூட்டி விவாதித்து
தீர்மானங்கள் நிறைவேற்றி
உரிய முறையில் ஒப்பந்த
புள்ளிகள் கோரி
தரமான
ஒப்பந்ததாரர்களை
தேர்வு செய்து
கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளாமல்
தங்கள் மீதான
நடவடிக்கைகளை
தவிர்க்கும் விதமாக
தலைமை ஆசிரியர்கள்
செயல்பட்டுளனர்.
ஒரு தவறான
முன்னுதாரணத்தையும்
அரசுக்கு அவப்பெயரை
ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டுள்ள
இவர்கள் மீது
துறை ரீதியான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மெத்தனமாக செயல்பட்டு
தலைமை ஆசிரியர்களை
பாதுகாக்கும் விதமாக
உரிய நடவடிக்கை
எடுக்காத
மாவட்ட கல்வித்துறை
அதிகாரிகள் மீது
ஒழுங்கு நடவடிக்கைகள்
எடுக்கப்பட வேண்டும்.
ஊழல் மற்றும்
முறைகேட்டில் ஈடுபட்ட
பேரவை பிரதிநிதிகள் மீது
காவல்துறை சட்டரீதியான
குற்றவியல் நடவடிக்கைகள்
மேற்கொள்ள வேண்டும்.
ரெப்கோ வங்கி
உடனடியாக ஒழுங்கு
நடவடிக்கை எடுத்து
ஊழலில் ஈடுபட்ட
பேரவை உறுப்பினர்களை
தகுதி நீக்கம் செய்திட வேண்டும்.
இதன் மீது உரிய
நடவடிக்கை எடுக்காத
ரெப்கோ வங்கி பெருந்தலைவர்
சந்தானம், மற்றும்
ஊழலுக்கு வித்திட்ட
ரெப்கோ பைனான்ஸ்
பெருந்தலைவர்
தங்கராஜு ஆகியோர்
தார்மீக பொறுப்பேற்று
பதவி விலக வேண்டும்.
இக்கோரிக்கைகள் மீது
உடனடி நடவடிக்கை
எடுக்க தவறும் பட்சத்தில்
மாவட்ட கல்வித்துறை
அலுவலகம் முன்பாகவும்,
ரெப்கோ ஹோம்
பைனான்ஸ் குன்னூர் கிளை முன்பாகவும்,
தொடர்ந்தும் நடவடிக்கை
எடுக்கவில்லை என்றால்
பள்ளிக் கல்வி இயக்குநர்
அலுவலகம் முன்பாகவும்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ்
தலைமை அலுவலகம்
முன்பாகவும் போராட்டம்
நடத்தப்படவும்
சட்ட ரீதியான நடவடிக்கைகள்
மேற்கொள்ளவும்
முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் ஒரு கோடியே 25 இலட்சம்
ரூபாய் வழங்கிய
ஹோம் பைனான்ஸ் நிறுவனம்
ஒரு முறை வழங்கிய
நிதியில் தணிக்கை
செய்யப்படமாட்டாது
என்கிற வாய்ப்பை
பயன்படுத்திக் கொண்டு
எதிர்காலத்திலும் ஊழல்கள்
நடைபெற வாய்ப்புள்ளதால்
தற்போது வழங்கிய
கழிப்பறை கட்டுமான முறைகேடுகளின் மீது
பொறியாளர்களை கொண்டு
ஆய்வுகள் மேற்கொண்டு
அறிக்கை வெளியிட வேண்டும்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில்
80க்கும் மேற்பட்ட
தாயகம் திரும்பிய மக்கள்
பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூடலூர் பகுதி பொது நல அமைப்புகள், ரெப்கோ வங்கி ‘அ’ வகுப்பு உறுப்பினர்கள், பேரவை பிரதி நிதிகள், கலந்து கொண்டு மோசடிதார்ர்கள் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினர். இது சம்பந்தமான புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை, மத்திய அரசு வங்கியான ரெப்கோ வங்கி அதிகாரிகளுக்கு இதன் கூட்டியக்கம் சார்பில் மோசடிகள் குறித்து புகார் மனுக்களை அனுப்பியுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். தென்னிந்திய தாயகம் திரும்பியோர் அமைப்பு மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இக்கூட்டரங்கில் அனைத்து செய்தி ஊடகத்தினர்கள் கலந்துகொண்டனர். முடிவில்
வேலு. ராஜேந்திரன்
நன்றி கூறினார்.