சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில், கடலில் பெருமளவில் சாக்கடை நீர் கலப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது.
சுமார் 25,000 பேர் வசிக்கும் இந்த பகுதியில் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை வெளியிடும் சாக்கடை நீர், எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கிறது. இச்சாக்கடையுடன் மனிதக் கழிவுகளும் கலந்து புனித கடலை மாசுபடுத்தி வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், நூற்றுக்கணக்கான மீனவர்கள் இந்த மாசடைந்த கடலேந்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் உடல்நலமும், வாழ்க்கையும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகிலேயே சாக்கடை நீர் கலப்பதால், நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் இறங்கும்போது, அவர்கள் அறியாமலேயே மாசுபட்ட நீரில் மூழ்கி வருகின்றனர் என்பது கவலையளிக்கின்றது.
இந்த நிலையில், இன்று புதன்கிழமை (21ஆம் தேதி) ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் என உபகார மாதா திருத்தல பங்கு பேரவை துணைத்தலைவர் டாலன் டி.ஓட்டா அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை ஏராளமான மீனவர்கள் புனித அலங்கார உபகார மாதா திருத்தலை உலகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நாட்டுப்பாட குகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.