நாகர்கோவில் செப் 28
கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர். கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்;கு ஆளாவதைத் தவிர்த்திடும் நோக்கிலும், குறிப்பாக இரத்த சோகையினால் பாதிக்கப்படுவதைத் தவிர்த்திடவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் சத்தான உணவு, ஊட்டச்சத்து, உடல்நலம், தன்சுத்தம் மற்றும்; சுகாதாரம் பேணுதல் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ஒவ்வொரு கிராம் வாரியாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இரத்த சோகை இல்லாத கிராமமாக மாற்ற தொடர்ந்து சிறப்பு பிரச்சாரங்கள், சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள் அளவில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற 3 சுய உதவிக் குழுக்களுக்கு வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது.
அதில் வெற்றி பெற்ற சுய உதவிக் குழுவினருக்கு மாவட்ட அளவில் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து 9 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 18 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சிறு தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாராம்பரிய பொருட்களால் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டன. இதில் முதல் பரிசு பெற்ற சுய உதவிக்குழுவிற்கு ரூ.5,000-ம், இரண்டாம் பரிசு பெற்ற சுய உதவிக்குழுவிற்கு ரூ.4,000. மூன்றாம் பரிசு பெற்ற சுய உதவிக் குழுவிற்கு ரூ.3.000 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, உத்தரவுப்படி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இணை இயக்குநர் திட்ட இயக்குநர் சா.பத்ஹீ முகம்மது நசீர். திட்ட அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் ஜெயந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) த.கருணாவதி, உதவி திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.