முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் விஞ்ஞானி டாக்டர் ஜெ.டேனியல் செல்லப்பா கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு அறிவியல் சிறப்பான முறையில் மனிதகுலத்திற்கு பயன்படுவது குறித்தும் மனித வாழ்வை மேம்படுத்த அறிவியலின் பங்கு குறித்தும் விளக்கமாக எடுத்துதார். நிகழ்ச்சியில் பள்ளி சேர்மன் டாக்டர்
கே.காந்திராசு பள்ளியின் முதல்வர் ஆர்.அடலினே லீமா, மாவட்ட கல்வி அதிகாரி ஜெ.ரவி தனியார் பள்ளிகள். டி.என். எஸ்எப் செயலர் கே காந்தி, முதுகுளத்தூர் வட்டார கல்வி அலுவலர் எஸ்.பத்மநாதன். பள்ளியின் நிர்வாகி வக்கீல் சந்திரசேகர், முன்னாள் என்.சி.சி. அதிகாரி எஸ். துரைபாண்டியன் மதுரை மாதவா கல்லூரி பேராசிரியர் டாக்டர் குணசேகரன் உதவி பிரின்சிபால் வி.வி .ஜெயா ஆகியோர் கலந்து கொண்டு அறிவியல் கற்பதின் அவசியம் குறித்து மாணவ மாணவியர்க்கு விளக்கினார்கள்.