மதுரை மார்ச் 6,
மணற்கேணி செயலி பதிவிறக்கம் –
பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்
மதுரை மேற்கு ஒன்றியம் வீரபாண்டி தொடக்கப்பள்ளியில் மணற்கேணி செயலி பதிவிறக்கம் தொடர்பான பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செல்வ குமரேசன் விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பாடங்கள் அனைத்தையும் வீடியோ வடிவில் எளிமையாக கற்பித்திட மணற்கேணி என்னும் செயலி தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் அனைத்தும் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நீட்
ஜேஇஇ போன்ற பாடங்களுக்கு பயிற்சியும் கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 84 பெற்றோர்களும் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்தனர்.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜேக்கப், கவிதா, நாகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.