கீழக்கரை மே 28-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா, சந்தனக்கூடு திருவிழாவில் பயன்படுத்த உயர்தர பன்னீரில் ஊறவைத்த சந்தன கட்டைகளை அரைக்கும் பணி துவங்கியது
ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் சையது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது இங்கு 850 ஆம் ஆண்டிற்கான உரூஸ் என்னும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா மே 9 மவுலுதுடன் துவங்கியது.தொடர்ந்து 23 நாட்களும் உலக நன்மைக்காக (புகழ்மாலை) மவுலீது ஓதப்படுகிறது.
மே 19 கொடியேற்றம் நடந்தது மே 31 மாலையில் சந்தனக்கூடு விழா தொடங்கி மறுநாள் ஜூன் 1ல் அதிகாலையில் சந்தனக்கூடு ஊர்வலம் வந்தவுடன் பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இவ்விழாவிற்காக தர்கா நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசிடம் இருந்து ரூ.12 லட்சத்திற்கு உயர்தர சந்தன கட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன பெரிய அண்டாக்களில் உயர்தர பன்னீர் ஊற்றி ஒரு வார காலம் சந்தன கட்டைகள் ஊறவைக்கப்பட்டது நேற்று வட்ட வடிவ பாறையிலான கற்களில் சந்தனக் கட்டைகளை தர்கா ஹக்தார்கள் அரைக்கும் பணியை மவ்லீது ஓதி தர்கா நிர்வாகத்தின் தலைவர் பாக்கிர் சுல்தான் துவங்கி வைத்தார் செயலாளர் செய்யது சிராஜுதீன் கூறியதாவது:-
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் ஏர்வாடி சந்தனக்கூடு விழாவிற்காக சந்தனக்கட்டைகளை தினமும் 10 பேர் 10 மணி நேரம் அரைக்க வேண்டும்.
அவ்வாறு ஆறு நாட்கள் அரைக்கப்படும் சந்தனம் மே 31ல் நிறைவடையும் மறுநாள் அதிகாலையில் பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவில் சந்தனம் பூசப்படும் விழா நிறைவிவிற்குப் பிறகு சந்தன பிரசாதத்தை யாத்திரைகள் மற்றும் பொது மக்களுக்கு பெற்றுக் கொள்வர் என்றனர்.