தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் விஸ்டம் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது..
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து ஹமீது டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் ஹாசன் சாலை விழிப்புணர்வு பற்றி பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.அதன் பின்னர் சாலை பாதுகாப்பு சட்டத்தை பற்றியும் சாலை விபத்துகளை பற்றியும் வழக்கறிஞர் பிரகாஷ் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்வின் போது சமூக ஆர்வலர் கோடீஸ்வரன் அஜித் குமார் ஷேக் முகமது வேலாயுத பெருமாள் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். விழா நிறைவில் பள்ளி ஆசிரியர் நன்றி கூறினார்..