நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 91 மாணவர்கள் படிக்கிறார்கள் கடந்த ஐந்து வருடமாக இப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாமல் ஒரே வகுப்பறையில் வகுப்புகள் நடத்தப்படுவதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக பெற்றோர்கள் மாணவர்கள் ஊட்டி கல்லட்டி சாலை சோலாடா பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவமறிந்த கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக கட்டிடம் கட்டி தருவதாக கூறியதின் அடிப்படையில் சாலை மறியல் கைவிடப்பட்டது. கடந்த ஐந்து வருடமாக இந்த பள்ளியில் அடிப்படை தேவைகள் நிறைவேற்ற கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி தராததை கண்டித்தும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



