மதுரை மார்ச் 18,
மதுரை மாநகர போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் கோரிப்பாளையத்தில்
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை தல்லாகுளம் ஆய்வாளர் பஞ்சவர்ணம் தலைமையில் நடைபெற்றது. இதில்
ஆட்டோ ஓட்டுநர்கள் மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, ஆட்டோ ஓட்டுனர் சீட்டில் இரண்டு அல்லது மூன்று நபர் உட்கார்ந்து ஆட்டோவை ஓட்டக்கூடாது, கண்ட இடத்தில் ஆட்டோவை நிறுத்தக்கூடாது, மேலும் வாகன தணிக்கை செய்து முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதை கூடல் புதூர் சார்பு ஆய்வாளர் ஜோதிமணி மற்றும் தல்லாகுளம் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆட்டோ ஓட்டுனருக்கு அறிவுரை வழங்கினார்கள்.