ஈரோடு பிப் 28
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் 2025-2026-ம் நிதியாண்டுக்கான ஈரோடு மாவட்டத்தின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்.
அப்போது அவர்
தெரிவித்ததாவது
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் 2025-2026-ம் நிதியாண்டுக்கான ஈரோடு மாவட்டத்தின் கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வளம் சார்ந்த திட்ட அறிக்கையின்படி ஈரோடு மாவட்டத்துக்கான கடன் திறனை ரூ.31929.86 கோடியாக நபார்டு வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த இலக்கு நடப்பு 2024-25 ஆம் ஆண்டு இலக்கை விட 21.58 சதவிகிதம் அதிகமாகும். விவசாயத் துறை, நுண் சிறு மற்றும் குறு நிறுவனங்கள், கல்வி மற்றும் வீட்டுத் துறைகளுக்கான கடன்கள் தேவையற்ற தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். மேலும், ஈரோடு மாவட்டத்தில் வரும் 2025-26 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துணைத்தொழில்களுக்கான கடன் ரூபாய் 12608.99 கோடிகளாகவும், நுண் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூபாய் 14122.95 கோடிகளாகவும், ஏற்றுமதிக்கு, கல்வி கடன், மீள்சக்தி சுய உதவி குழு ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ. 5197.92 கோடிகளாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ் குமார், இந்திய ரிசர்வ்
வங்கியின் மேலாளர் வம்சிதர் ரெட்டி, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர்
அசோக்குமார், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.