கம்பம் செப் 28
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்காக தனது உயிரை நீர்த்த போராளி நெருப்புத் தமிழன் நீலவேந்தன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தையொட்டி தேனி மாவட்டம் கம்பத்தில் தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் தனது சமுதாயத்திற்காக உயிரை நீர்த்த நீலவேந்தன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர், தேனி தெற்கு மாவட்ட தலைவர் அதிகர் மணி தலைமை வகித்தார். மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் கோட்டை குரு முருகன் முன்னிலை வகித்தார், முன்னாள் நகர பொறுப்பாளர் அழகர்சாமி,அழகர்சாமி,கம்பம் நகர செயலாளர் கண்ணன், நகர இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், இளைஞர் அணி துணைச் செயலாளர் விக்னேஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீதர் என்ற நீல வேந்தன் எப்படி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பெரியார் காலனி நேதாஜி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் ஸ்ரீதர் என்ற நீலவேந்தன் வயது 34 வழக்கறிஞரான இவர் ஆதித்தமிழர் பேரவையின் மாநில செயலாளராக இருந்துள்ளார். ஸ்ரீதர் கடந்த 2013, 26 ஆம் தேதி அதிகாலை மாநகராட்சி பார்கெட் முன் வந்தவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து உடல் முழுவதும் ஊற்றி பின்னர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். தீ கொழுந்து விட்டு எரிந்தத வேதனையில் அலறிதுடித்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் இன்ஸ்பெக்டர் சையது மற்றும் போலீசார் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் அங்கு கருகிய நிலையில் கிடந்த ஸ்ரீதரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அதிகாலை 6:00 மணி அளவில் பரிதாபமாக இறந்தார். முன்னதாக போலீசாரிடம் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில் கூறியதாவது நான் ஆதித்தமிழர் பேரவையின் மாநில செயலாளராக உள்ளேன் அருந்ததியருக்கு தாழ்த்தப்பட்ட இனத்தில் உள் ஒதுக்கீடு 3% சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது எனது மக்களுக்கு போதுமானதாக இல்லை படித்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பு இன்றி சம்பந்தமில்லாத வேலையில் விருப்பமின்றி வேலை செய்து வருகிறார்கள். மேலும் கல்வியிலும் வேலை வாய்ப்புகளும் அருந்ததியினர் மிகவும் பின்தங்கிய உள்ளனர். இதை எதிர்த்து பலமுறை பேசியுள்ளேன் போராடியுள்ளேன் ஆகவே அதிகாரிகளிடம் குறைந்தபட்சம் அருந்ததியர்களுக்கு 6% சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை எடுத்தேன். ஆனால் யாரும் இந்த கோரிக்கையை காது கொடுத்து கூட கேட்கவில்லை இதனால் வெறுப்படைந்தேன். எனவே எனது இனம் விழிப்புணர்வை அடையவே நான் தீக்குளித்தேன் என கூறியது போலீசாரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே டிசம்பர் 26 ஆம் தேதி ஆதித்தமிழர் பேரவை மற்றும் ஆதித்தமிழர் இன மக்கள் தமிழக மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் மக்களும் இவர் நினைவேந்தலை நீலவேந்தன் திருவுருவப் படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி அனுசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.