கன்னியாகுமரி,அக்.29-
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தலைவர் மார்க்கஸ் நேற்று மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு ஒன்று வழங்கினார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது;
மருங்கூர் அடுத்துள்ள இராமநாச்சிதன்புதூரில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்குவாரியில் இருந்து வரும் பெருமளவு வாகனங்கள் இராமநாச்சிதன்புதூர் வழியாக செல்வதால் மிகுந்த வாகன நெருக்கடியும் ,தூசி புழுதி உருவாகி மக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது .
குறிப்பாக காலை நேரங்களில் பள்ளி கல்லூரி செல்லும் வாகனங்களுக்கும் அரசு பேருந்துகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது .மேலும் ராமநாதன் புதூரில் அமைந்துள்ள அங்கன்வாடி குழந்தைகள் பள்ளி தூசும் புகையுமாக எந்நேரமும் இருப்பதால் பாலக பிள்ளைகளுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது.
குழந்தைகள் சாலையில் வாகன நெருக்கடியில் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னால் தனியார் பள்ளி குழந்தை , இப்பகுதியில் ஏற்படும் வாகன நெருக்கடியின் போது டாரஸ் வாகனம் பின்னோக்கி செல்லும் போது வாகனம் மோதி உயிரிழந்தது அனைவருக்கும் தெரியும்.
மேலும் இது வனப்பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. எனவே இந்த கல்குவாரியை பொதுமக்களும், குழந்தைகளுக்கும் இடையூறு ஏற்படாத இடத்திற்கு மாற்றம் செய்து, பொதுமக்கள் நலனை காக்க வேண்டும். மனு வழங்கும் போது நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் உட்பட பலர் உடனிருந்தனர்.