இராமேஸ்வரம்.ஏப்ரல் 03 .
இராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராக மத்திய சட்ட அமைச்சகம் ராமேஸ்வரத்தை சார்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி மத்திய அரசு வழக்கறிஞராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.
ராமமூர்த்தி ஆரம்ப கல்வியை கமுதி செகநாதபுரத்திலும் மேல்நிலைப் பள்ளியை ராமேஸ்வரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சட்டக் கல்லூரியை மதுரையிலும் பயின்றவர்.
இவர் 1991 ஆம் வருடம் இந்து முன்னணியில் இணைந்து பணியாற்றினார்.
மேலும் இவர் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் முடித்து ஆர் எஸ் எஸ் இல் மக்கள் தொடர்பு செயலாளர் ஆகவும்.
1997 முதல் 2002 வரை
ஏபிவிபி. மாணவர் இயக்கத்தில் மதுரை மாநகரச் செயலாளர் மாநில இணைச் செயலாளர் போன்ற பொறுப்புகளில் இருந்து ஊழியராக பணியாற்றியவர்.
இந்துமுன்னணியில் மாவட்ட அலுவலக செயலாளர், மற்றும் மாவட்ட செயலாளர், மாவட்ட பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து
தற்போது மாவட்ட தலைவராக பணியாற்றி வருகிறார்.
மத்திய அரசில் இராமநாதபுரம் மாவட்ட மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றி வந்த இவரை தற்போது மத்திய சட்ட அமைச்சகம் ராமநாதபுரம் மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.
இவருடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞராக சவுந்தர பாண்டியன், சிவசங்கர், சுரேஷ் ,முருகேசன் ஆகியோர்களை மத்திய அரசு நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியஅரசு வழக்கறிஞராக ராமேஸ்வரம் வழக்கறிஞர்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics