திருப்பூர்ஆக.21 மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திய முன்னாள் பிரதமர் அமரர்
ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா இன்று குமரன் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் ஆர் .கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ராஜீவ் காந்தி மத நல்லிணக்க உறுதி மொழி வாசிக்கப்பட்டு அனைவரும் ஏற்க பட்டது பின்னர் அங்குள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கோபால்சாமி
வி ஆர் ஈஸ்வரன் துணைத் தலைவர் வெ. கோபால் பாகனேரி ரவீந்திரன் ஈஸ்வரமூர்த்தி விஸ்வநாதன் தலைவர் விவசாய அணிப்பிரிவு மகிளா காங்கிரஸ் விக்டோரியா, வர்த்தக அணி பிரிவு தலைவர் ஷேக் தாவூத், சுலைமான், இளைஞர் காங்கிரஸ் அணி
பிரதீப், முகமதுஹசன், சந்தீப், மற்றும் மண்டல நிர்வாகிகள் வார்டு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.