மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள விஜயா திரையரங்கில்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் நீண்ட வரிசையில் இன்று படம் பார்க்க உள்ளே சென்றனர். படத்தின் இடைவேளை நேரத்தின்போது பட்டாசு வெடித்தும், ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் டி.எல்.ராஜேஸ்வரன் தலைமையில் ரசிகர்கள் திரையரங்கு முன்பு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து
அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டுமென்றும் ஒரு நிமிடம் ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் பவுன் முருகானந்தம், செந்தில் ஒன்றிய செயலாளர், மாவட்ட இளைஞரணிசெயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.