நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள கைப்பந்து மைதான தூணில் ஒவ்வொரு வெள்ளி கிழமைகளிலும் பூ போட்டு பழம் வைத்து பத்தி கொளுத்தி பூஜை போடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் இன்று பூஜையை காண முடிந்தது.
ஏன் இந்த ஓர வஞ்சனை ?
கால்பந்து, கூடைப்பந்து, ஓடுதளம் என எல்லா மைதானத்திற்கும் பொதுவாக பூஜை போட்டால் விளையாட்டு அரங்கத்தில் எல்லா விளையாட்டும் சிறந்து விளங்கும். பூஜையோடு பாயாசம் காச்சி சுண்டலோடு விளையாட்டு வீரர்களும் பொதுமக்களுக்கும் பிரசாதமாக வழங்கினால் ஆரோக்கியத்திற்கு உதவும். ஆவன செய்வாரா மாவட்ட விளையாட்டு அலுவலர் ?