பூதப்பாண்டி – அக்டோபர் – 18-
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள ஞாலம் ஊராட்ச்சிக்கு உள்பட்ட பகுதியான காரியாங்கோணம் பகுதியில் இரண்டு கோடி ரூபாய் நிதியில் புதிய மின் மாயானம் அமைப்பதற்க்கு இடம் தேர்வு செய்ய தோவாளை தாசில்தார் கோலப்பன் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். அப்பொழுது அந்த பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியில் சுடுகாடு அமைக்க இடம் தேர்வு செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்கள். இதனை அடுத்து வருவாய் துறையில் அங்கிருந்து சென்றனர்கள் பின்னர் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இந்த பகுதி மக்களிடம் கருத்து கேப்பு நடத்தி அதன் பின்னரே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார். எந்த அசைவும் இன்று இருந்த நிலையில் நேற்று காலையில் சுமார் 10.00 மணியளவில் கோட்டாச்சியர் தலைமையில் வருவாய் துறையினர் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடம் வந்தனர்கள். இதனால் அந்த பகுதி மீண்டும் பரபரப்பானது உடனே அந்த பகுதி ஒன்றிய கவுன்சிலர் ஏசுதாஸ், அதிமுக ஊராட்சி செயலாளர் ஞாலம் ஜெகதீஷ் தலைமையில் அப்பகுதியில் கூடினார்கள். அதிகாரிகளிடம் அவர்கள் எங்கள் குடியிருப்பு அருகே மின்மாயானம் வேண்டாம் என்றும் இந்த இடத்தில் ஏற்கனவே ஏழு நபர்களுக்கு வீடு வைப்பதற்க்கு ஒதுக்கிய இடம் என்றும் நீங்கள் இந்த திட்டத்தை கைவிட்டு விட்டு வேறு இடத்திற்க்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். உடனே அதிகாரிகள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்து சொல்வதாக கூறி அந்த இடத்தவிட்டு நகர்ந்தனர்கள். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.