மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொது
மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 14 மனுக்களும், காலி மனை வரி விதிப்பு வேண்டி 6 மனுக்களும், புதிய சொத்து வரி மற்றும் வரிப்பிரிவினை வேண்டி 19 மனுக்களும், குடிநீர் இணைப்பு, சாலை வசதி, பாதாளச் சாக்கடை இணைப்பு மற்றும் அடிப்படை வசதி வேண்டி 27 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 7 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 3 மனுக்களும் என மொத்தம் 76 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயர் நேரடியாக பெற்றார். நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய வேண்டி விண்ணப்பித்த மனுதாருக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து அதற்கான ஆணையினை மேயர் மனுதாரருக்கு வழங்கினார்கள்.
முன்னதாக மண்டலம் 3 வார்டு எண்.50 ஆதிமூலம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 116 மாணவிகளுக்கு மேயர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத்தலைவர்கள் வாசுகி, பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர்கள் பார்த்தசாரதி, ரெங்கராஜன், நகர் நல அலுவலர் மரு.வினோத் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கல்வி அலுவலர் ரகுபதி, செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர். ஜெகஜீவராம், உதவி வருவாய் அலுவலர் லோகநாதன், கண்காணிப்பாளர் மரகதவல்லி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.