இவ்விழாவில் முதல் நிகழ்ச்சியாக குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி பின்பு நடன நாட்டிய நிகழ்ச்சி மற்றும் உணவு கேட்டரிங் உரிமையாளர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகள்
கருத்துக்களை
முன்வைத்தனர். கேட்டரிங்
வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது கேட்டரியில் சேவையில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் தான் இவர்களின் நலனில் அக்கறை காண வேண்டும் என்றும் அவர்கள் பிள்ளை படிப்புக்கும் அவர்களது நலனின் அக்கறை கொள்ள வேண்டும் என்றும் கூறினர். மேலும் கேட்டரிங் உரிமையாளர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டது, விழாவில் சிறப்பு அழைப்பாளராக கின்னஸ் சாதனையாளர் டாக்டர் செப் தாமு கலந்து கொண்டு சிறப்பித்தார், இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தலைவர் சிந்து கிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் தங்கராஜ், மாநில பொருளாளர் உமா கிருஷ்ணசாமி மற்றும் மாநில தலைமை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர், வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.