எஸ்.பி தங்கதுரை துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலையம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது,
இவ்விழாவில்
காவேரிப்பட்டணம் காவல் குடியிருப்பு போலீசார் குடும்பத்துடன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. சிறுவர்களுக்கு சாக்கு பை போட்டி, இசை நாற்காலி போட்டி, லெமன் ஸ்பூன் போட்டி, தமிழர்களின் பாரம்பரியமான உரியடித்தல் நிகழ்ச்சி உள்ளிட்ட ஏராளமானவர்கள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி தங்கதுரை கலந்து கொண்டு துவக்கி வைத்தார் . போட்டியில் வெற்றி பெற்ற போலிசார் மற்றும் போலிசாரின் குழந்தைகளுக்கு காவேரிப்பட்டினம் காவல் ஆய்வாளர் சரவணன் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.