பி.டி.லீ .செங்கல்வராயர் நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்.
சென்னை வேப்பேரியில் உள்ள பி.டி .லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை பாலிடெக்னிக் கல்லூரியும் வலியறிதல் அறக்கட்டளையும் இணைந்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. இந்த வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வள்ளல் பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர் கே.கலையரசன்
கலந்து கொண்டார். மேலும் கௌரவ அறங்காவலர்கள் வி . சந்திரசேகரன், எஸ் சாத்தப்பிள்ளை, ஆர். கண்ணையன், எஸ். ரேணுகா, எச் .வெங்கடேஷ், பி . அரிஸ்டாட்டில், எம் .ராஜேந்திரன், எம் .என் .விஜயசுந்தரம் , செயலாளர் சாம்பசிவம், அறக்கட்டளையின் ஆலோசகர்கள் கே . ஜெகநாதன் , கே.மின்ராஜ், ஒருங்கிணைப்பாளர் வனமாலா, அறக்கட்டளையின் இயக்குநர் பேராசிரியர் எம்.அருளரசு,
தாளாளர் எம் .வெங்கட்ராமன் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .
பி .டி .லீ .செங்கல்வராயர் நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர் கே.கலையரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
பி.டி .லீ .செங்கல்வராயர் நாயக்கர்
பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வலியறிதல் அறக்கட்டளையும் இணைந்து பாலிடெக்னிக் இறுதியாண்டு மாணவர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. 28 பொறியியல் மென்பொருள் மற்றும் வன்பொருள் நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்த முகாமில் 517 பேர் தங்களை பதிவு செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு நடந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பும்
அவர்களுக்கு வருடத்திற்கு ரூ.3 இலட்சம் வரையில் ஊதியம் பெறும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்திருக்கிறோம் .
பி.டி.லீ . செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி மட்டுமின்றி வேறு சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் செய்முறை பாடத்தில் அதிக கவனம் செலுத்தும் வகையில்
திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தினை வரும் கல்வியாண்டில் அறிமுக படுத்தி மாணவர்களை தொழில் வல்லுநர்களாக உருவாக்கும் நோக்கில் முயற்சியை மேற்கொள்கிறோம் என்றார்.