கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 393 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தாட்கோ மூலம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், கீழ்குப்பம் ஊராட்சி, பனமரத்துப்பட்டி கிராமத்தில் ரூ.1 கோடியே 55 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடத்திற்கான சாவியை மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, ரூ.13,349 வீதம் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 53 ஆயிரத்து 631 மதிப்பில் திறன்பேசிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் .பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம்.எஸ்.சுந்தராஜ், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .சீ.பாபு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .முருகேசன், தாட்கோ மாவட்ட மேலாளர் .வேல்முருகன் உள்ளிட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.