பரஞ்சோதி ஐஸ்வர்ய சோமதீட்சை
ராமநாதபுரம் செப்02
இராமநாதபுரம் MG கல்யாண மண்டபத்தில் பரஞ்சோதி ஐஸ்வர்ய சோமதீட்சை என்கின்ற ஆன்மீக நிகழ்ச்சி சுமார் இரண்டு மணி நேரம்
நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சென்னை நேமத்தில் உள்ள பரஞ்ஜோதி ஆலயத்தின் சீடர் யோகநாதன் ஜி அவர்கள் இந்நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
அதில் அவர் கூறியது: வெளிஉலகத்தில் பணக் கஷ்டம்… உடல் நலக்குறைவு குடும்ப உறவுகளில் விரிசல் வியாபாரத்தில் தோல்வி என மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதற்கு காரணம் நம் உள் உலகமே. நம் உள் உலகத்தின் பிரதிபலிப்புதான் வெளி உலகம்… உள்உலக சிந்தனைகள் மாறும்போது வெளி உலகில் வெற்றியும் வளர்ச்சியும் ஏற்படுகிறது என்றார். மேலும் நமது வாழ்க்கையில் இருக்கும் ஐஸ்வர்ய பிரச்சனைகள் தீர்வதற்கு நான்கு முக்கிய தூண்களை சரி செய்ய வேண்டும். அவை
(1) சரியான கண்ணோட்டம்
(2) நேர்மறை சிந்தனைகள்
(3) உறவுகளில் ஒற்றுமை
(4) நன்றி உணர்வு
இவை நான்கிற்காகவும் ஐஸ்வர்ய தீட்சை, பிரார்த்தனை மற்றும் தியானம் நடைபெற்றது.
கலந்து கொண்ட மக்கள் அனைவரும் ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சி அடைந்தனர். இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியை இராமநாதபுரம் மாவட்ட பரம்ஜோதி பக்தர்கள் ஏற்பாடு செய்து நடத்தி வைத்தார்கள்