கன்னியாகுமரி ஆக 11
குமரி மாவட்டம் மகாராஜபுரம் ஊராட்சியில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.
பனை பரப்பளவை விரிவாக்கம் செய்வதற்காக தமிழக அரசு ஊராட்சி பகுதியில் உள்ள நீர்நிலைகளின் ஒரத்தில் பனை விதைகளை நடும்பணியை நடைமுறைப்படுத்தி வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 1,200 பனை விதைகளை நடுவதற்கு கலெக்டர் அழகுமீனா நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மகாராஜபுரம் ஊராட்சி அயங்குளம் பகுதியிலும் பனை விதை நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மகாராஜபுரம் ஊராட்சி தலைவர் இசக்கிமுத்து, தலைமை வகித்து பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தார்.நிகழ்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகபாய், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆறுமுகம் தோட்டக்கலை அலுவலர் ஹிமான்ஜனா, உதவி தோட்டக்கலை அலுவலர் நளினி, ஊராட்சி பணியாளர்கள் கலை,அனு,சொர்ணலதா மற்றும் நூறுநாள் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்