கன்னியாகுமரி கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் +2 பரீட்சை எழுதி இருப்பவர் ரிந்தியா இவர் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தன் விடாமுயற்சியாலும் உடற்பயிற்சி ஆசிரியர் ராஜகுமார் ஒத்துழைப்பாலும் மாவட்ட ,மாநில, தேசிய அளவில் போட்டியில் பல பதக்கங்களை பெற்றுள்ளார்.
2024-25 ஆண்டுக்கான பள்ளிகளுக்கான தடகளப்போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார். ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் தேசிய பள்ளிகளுக்கிடையே இடையே நடந்த தடகளப் போட்டிகயில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.
அடுத்து 11.05.2025 முதல் பாட்னாவில் நடைபெறும் கேலோ இந்தியா தடகலிப் போட்டியில் தேசிய அளவில் தமிழக அணிக்காக ரிந்தியா தேர்வு பெற்றுள்ளார். இவருக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும் தென்குமரி கல்விக் கழகச் செயலாளருமான பி.டி.செல்வகுமார் நிதி உதவி வழங்கினார். அவர் மேலும் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது கிராமப்புறங்களில் பல ஏழை பெண்கள் திறமைகளை சுமந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு ஏங்கி தவித்துக் கொள்கின்றனர் அப்படிப்பட்ட ஏழைப் பெண்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் உதவி கரம் நீட்டும் ஆனால் இது போதாது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போதிய உதவிகளை வழங்கி இவரின் திறமையை வெளிக்கொண்டு வர உதவ வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாணவியின் தந்தை, தாய், பயிற்சியாளர்கள் ராஜகுமார் ,விஷ்வா கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், ஆசிரியர் முத்துசாமி, பொருளாளர் சிவராஜன், கொட்டாரம் பேரூராட்சி செயலாளர் ரகுபதி, கொட்டாரம் மணியா நகர் ஊர் தலைவர் கணேசன், இளைஞர் அணி சுபாஷ், செந்தில், உடன் இருந்தார்.