மதுரை மாவட்டம் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் வாயிலாக மதுரை மாவட்டத்தை 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக முன்னேற்றும் நோக்கில் 2024 – 2025 கல்வியாண்டில் 27119 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் அடிப்படை வாழ்வியல்திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இக்கல்வியாண்டில் இவர்களுக்கான வகுப்புகள், 15.07.2024 அன்று கற்போருக்கு குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே அமைந்திருக்கும் 1653 எழுத்தறிவு மையங்களில் தொடங்கப்பட்டுள்ளன. மையத்திற்கு ஒருவர் வீதம் இவர்களுக்கு 1653 தன்னார்வலர்கள் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர்.
15 வட்டாரங்களில் உள்ள எழுத்தறிவு மையங்களில் கற்பிற்கும் தன்னார்வலர்களுக்கு பாடப்பொருள் சார்ந்த கற்பித்தல் பயிற்சி, வருகின்ற 30.07.204 மற்றும் 31.07.2024 ஆகிய இரு நாட்களில் வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள கருத்தாளர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி இன்று மதுரை முதன்மைக்கல்வி அலுவலக கூட்டங்கில் நடைபெற்றது. பயிற்சியில் 80 ஆசிரியப்பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியினைத் தொடக்கி வைத்து பேசிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி. கா. கார்த்திகா, புதிய பாரத எழுத்தறிவுத்திட்டத்தின் மூலமாக தன்னார்வமாக எழுத்தறிவு மையங்களில் கற்பித்தல் பணிபுரியும் தன்னார்வலர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றும், அவர்களுக்கு அந்தந்த வட்டாரங்களில் சிறப்பான பயிற்சி வழங்கி கற்போருக்கு தன் பெயர், குடும்ப பெயர் எழுதுதல் மற்றும் வாசித்தல் மற்றும் வசிக்கும் தெரு, ஊர், மாவட்ட, மாநிலப் பெயர்களை வாசிக்கும் பயிற்சி, கைபேசி எண், ஆதார் எண். வங்கிக்கணக்கு எண், பேருந்து தடம் எண், கடிகாரம் பார்த்து நேரம் அறிதல், அவசர எண்களைத் தெரிந்து கொள்ளுதல் போன்ற அன்றாட பயன்பாட்டில் உள்ள அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கற்போருக்கு கற்பிக்க தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்துமாறு வட்டாரப்யிற்சியாளர்களைக்
கேட்டுக்கொண்டார். பயிற்சியினைப் பார்வையிட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் சாயி சுப்புலட்சுமி, சுப்பாராஜு, முதன்மைக்கல்வி அலுவலரின் மேல்நிலைக்கல்வி நேர்முக உதவியாளர் கந்த சாமி. உதவி
திட்ட அலுவலர் சரவண முருகன் ஆகியோர் சிறப்பான ஆலோசனைகள் வழங்கினர். பயிற்சியினை
ஆசிரியப்பயிற்றுநர்கள் தேவிகாராணி, பாண்டியலெட்சுமி, பாலமுருகன், சிவபார்வதி, செல்வி ஆகியோர் வழங்கினர்.