மதுரை ஜூலை 15,
கால் மாறி ஆடிய திருக்கோலத்தில் நடராஜர் அருள்பாலிப்பு மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி உத்திர திருமஞ்சன திருவிழாவை ஒட்டி பஞ்ச நடராஜ மூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. இந்த விழாவில் கால் மாறி ஆடிய திருக்கோலத்தில் வெள்ளியம்பல நடராஜர் எழுந்தருளினார். அதே கோலத்தில் நடராஜர் சிவகாமி அம்பாளும் பக்தர்களுக்கு அருள் பாலித்தினர். அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.