தென்தாமரைகுளத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு…!
மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் திறந்து வைத்தார்
தென்தாமரைகுளம் பேரூர் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பேரூர் தலைவர் ஜெயமணி தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் தீபக் சாலமோன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயன்றீன்,மண்டல தலைவர் பெல்வின்ஜோ,மாவட்ட செயலாளர் மைக்கிள் எடில்பெர்ட்,பொருளாளர் பன்னீர்செல்வம், செய்தி தொடர்பாளர் விஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான மரிய ஜெனிபர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக கட்சி கொடியேற்றம், இறைவணக்கம் பாடல் நிகழ்ச்சி நடந்தது.இதில்,அகஸ்தீஸ்வரம் தொகுதி தலைவர் சேதுபதி உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.