கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2023 ம் ஆண்டை விட கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் 2024 ம் ஆண்டில் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த 2023-ம் ஆண்டில் 59 கொலை வழக்கு பதிவாகியிருந்த நிலையில் இவ்வாண்டில் 56 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 5% குறைவாகும். கொலை வழக்கில் ஈடுபட்ட 18 நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வாண்டில் ஒரு ஆதாய கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டில் 3 கொள்ளை, 38 வழிப்பறி/ சங்கிலி பறிப்பு வழக்கு பதிவாகியிருந்த நிலையில் இவ்வாண்டில் 1 கொள்ளை, 30 வழிப்பறி/சங்கிலி பறிப்பு வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 25 % குறைவாகும். கன்ன களவு, திருட்டு, கால்நடை திருட்டு சம்மந்தமாக இவ்வாண்டில் 368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு. இதில் 81% வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 63% வழக்கின் சொத்துக்கள் மீட்டு உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 7 நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2023-ம் ஆண்டில் 753 நபர்கள் சாலை விபத்தால் இறப்பு ஏற்பட்ட நிலையில் காவல் துறையினரால் சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வின் விளைவாக இவ்வாண்டில் 686 நபர்கள் சாலை விபத்தால் இறந்துள்ளனர். சாலை விபத்தால் ஏற்பட்ட இறப்புகள் கடந்த ஆண்டை விட 9% குறைந்துள்ளது. மேலும் சாலை விதிகளை மீரிய 1,29,343 நபர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,00,17,050 /- ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,
சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக 5687 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5738 நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 1,94,94,502 ரூபாய் மதிப்பிலான 17700 லிட்டர் மதுபானங்கள் 70 இருசக்கர வாகனங்கள், 15 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக 259 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 306 நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 15,25,860/- ரூபாய் மதிப்பிலான 176 கிலோ கஞ்சா, 14 இருசக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 3 நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்ட விரோதமாக குட்கா விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக 1173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1213 நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 1,09,65,537/- ரூபாய் மதிப்பிலான 14,800 கிலோ குட்கா. 14 இருசக்கர வாகனங்கள், 38 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை சம்மந்தமாக 338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 393 நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 1,84,689 ரூபாய் மதிப்பிலான 3745 லாட்டரி டிக்கெட், 4 இருசக்கர வாகனங்கள். நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக சூதாட்டம் நடத்தியது சம்மந்தமாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 612 நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 8,84,930/- ரூபாய் பணம். 166 இருசக்கர வாகனங்கள் மற்றும் 6 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இணையவழி குற்றம் சம்மந்தமாக இவ்வாண்டில் 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையவழியாக இழந்த 30,93,32,969 ரூபாய் முடக்கம் செய்யப்பட்டு இதில் 2,43,78,821 ரூபாய் மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 320 தொலைந்து போன செல்போன்கள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
4 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்மந்தமாக 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 132 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாண்டில் 5 எதிரிகளுக்கு நீதிமன்றத்தால் தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் சட்டவிரோதமாக மது கடத்திய மற்றும் உரிமை கோரப்படாத 132 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 41,42,974/- ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாண்டில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி மற்றும் சட்ட விரோத செயல்களான கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை, மது விற்பனை செய்த 40 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது என எஸ்.பி தங்கதுரை தெரிவித்தார். மேலும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா. குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், கள்ளச்சாராயம் விற்பனை. மணல் கடத்தல், பனங்கள் விற்பனை, விபச்சார தொழில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது Whatsapp மூலமாக தகவல் தெரிவிக்கலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்மந்தமான புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098 மூலமாக தகவல் தெரிவிக்கலாம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்மந்தமான புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 181 மூலமாக தகவல் தெரிவிக்கலாம். கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை சம்மந்தமான புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 10581- ல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்தார்.