வேலூர் மாவட்டம் ஏப். 29
தமிழக வெற்றிக் கழக வேலூர் மேற்கு மாவட்ட தொண்டரணி சார்பில், கோடை வெயிலில் பொதுமக்கள் தாகம் தணிக்க நடமாடும் குளிர்பான வாகனம் தொடக்க நிகழ்ச்சி வேலூரில் நடந்தது. நிகழ்ச்–சிக்கு, வேலூர் மாவட்ட தொண்டர் அணி பி.ஏ.இம்தியாஸ் தலைமை தாங்கினார். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாவட்ட இணைச் செயலாளர் எம்.சீனிவாசன், பொருளாளர் கே.எம்.பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுமார் 1,000 குளிர்பான பாட்டில்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அனைத்து பிரிவு உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். கோடை வெயில் தணியும் வரை இந்த குளிர்பான வாகனம் மூலம் தினமும் வேலூர் மேற்கு மாவட்டத்தில் அனைத்து வார்டில் உள்ள பொதுஐ மக்களுக்கும் குளிர் பானங்கள் வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.