சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் எம் எல் ஏ ராஜா சென்னையில் அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து விவசாயிகளுக்காக கோரிக்கை அளித்தார் அம்மனுவில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்கவும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் மானூர் மேலநீலித நல்லூர் ஒன்றியங்கள் சங்கரன்கோவில் தொகுதியில் அடங்கும் இங்குள்ள விவசாயிகளுக்கு கடந்த 2023 2024 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கோரிக்கை மனு அளித்தார் மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.



