கன்னியாகுமரி ஜன 18
அகஸ்தீஸ்வரம் பேரூர் அதிமுக சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழா நேற்று அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் நடைபெற்றது.
பேரூர் செயலாளர் சிவபாலன் எம்.ஜி.ஆர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதில்,ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ரெமோ ,அகஸ்திஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் விஜயன்,பேரூர் அவைத் தலைவர் பால்துரை,கிளைச் செயலாளர்கள் சிவராஜன்,முத்துகுமார்,ஜெயபாலன்,பூஜை துரை, ஆனந்த்,கலைவளன்,நிர்வாகிகள் செல்லநாடார், அப்பாவு நாடார், ஆ.கோ.மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.