கோவை ஜன:27
கோவை மாவட்டம் காந்திமா நகர் பகுதியில் 76 -வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாநகர மாவட்டம் 25 வது வார்டு காந்திமா நகர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக குழந்தைகளுக்கு ரொட்டி பால் முட்டை பழம் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம், மற்றும் அன்னதானம் 25 ஆவது வார்டு செயற்குழு உறுப்பினர் கேப்டன் பிரபாகரன் ஏற்பாட்டில் கோவை மாநகர மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமையில் கேக் வெட்டி 800 மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உடன் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ராஜ்குமார் சத்தியமூர்த்தி உன்னிகிருஷ்ணன் சரவணன் மது சுரேஷ்குமார் அருண் பிரகாஷ் வடவள்ளி பிரவீன் பூ மார்க்கெட் ராகுல் செந்தில் சபரி 25 வது வார்டு கழக மாநகர கழகத் தோழர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.