ராமநாதபுரம், ஆக.17-
பாட்டாளி மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்றத் தொகுதி செயலாளர் தலைவர் மற்றும் தொகுதி மகளிர் அணி தலைவர் செயலாளர் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் தேவி பட்டணத்தில் நடைபெற்றது.
தனியார் மஹாலில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தேனி ஹக்கீம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் (பொறுப்பு) லட்சுமணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் முகவை ராசிக் வரவேற்புரை ஆற்றினார். திருவாடனை சட்டமன்றத் தொகுதி தலைவர் தேர்தல் மகளிர் அணி தலைவர் தேர்தல் பதவிக்கு 50க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து தலைமை கழக நிர்வாகிகள் இடம் வழங்கினர். பாட்டாளி மக்கள் கட்சி தலைமை கழகத்திலிருந்து மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி தஞ்சாவூர் மண்டல பொறுப்பாளர் ஐயப்பன் தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் இசக்கி முத்து ஆகியோர் தேர்தல் அலுவலர்களாக செயல்பட்டு நிர்வாகிகள் தேர்தலுக்கான விண்ணப்பங்களை பெற்று ஆய்வு செய்து நேர்காணல் நடத்தினர். பாட்டாளி மக்கள் கட்சி திருவாரனை சட்டமன்றத் தொகுதி தலைவர் செயலாளர் மகளிர் அணி தலைவர் செயலாளர் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு தலைமை கழகத்தில் உரிய ஒப்புதல் பெற்று அறிவிப்புகள் வெளியிடப்படும்.