திருப்பூர், செப். 30:
உலக இருதய தினத்தை முன்னிட்டு ரோட்டரி மற்றும் ரேவதி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி ரெயில் நிலையத்தில் தொடங்கி மாநகராட்சி வரை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்களுக்கு மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை, ரேவதி மருத்துவமனை டாக்டர் ஈஸ்வரமுர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் கல்லுரி மாணவிகள் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் கலந்துகொண்டு பேரணியாக சென்றனர்.