மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக தென்காசி மாவட்டம் சுரண்டையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய பழனி நாடார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முரளி ராஜா, பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி காங்கிரஸ் நகர தலைவர் மாடசாமி ஜோதிடர் ,சுரண்டை நகர தலைவர் ஜெயபால், , பால் துரை, கதிரவன் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நகர் மன்ற உறுப்பினர்கள்,முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் , தொண்டர்கள் கலந்து கொண்டனர்



