திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அகஸ்தியர் புரம் ஸ்ரீ அகத்தியர் சிவசக்தி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாத உற்சவ பெருந்திருவிழாவின்29-ஆம் ஆண்டு மண்டல பூஜை மற்றும்23 ஆம் ஆண்டு பூக்குழி இறங்கும் நிகழ்வு வெகு விமர்சியாக நடைபெற்றது மூன்று நாட்கள் நடைபெற்ற
இவ்விழாவில் மாபெரும் அன்னதானம் வழங்கினர் ஐயப்ப பக்தர்களும் ஊர் பொதுமக்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர் மேலும் சிவசக்தி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று முளைப்பாரிகளுடன் கரகம் பூஞ்சோலைக்கு புறப்பட்டது இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்த கோடிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.