திருப்பரங்குன்றம் டிசம்பர் 29
மதுரை தெற்கு மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் துரைப்பாண்டி தலைமையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிகே.வாசன். எம்பி -யின் 60 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிவசுந்தரம் கல்லம்பல் மாணிக்கவாசகம் நாக. மலைச்சாமி துறை நாகராஜ் உசிலை முருகன் கொடிகாத்த குமரன் ராஜாஜி
ஆகியோர் பங்கேற்று கட்சி தலைவருக்கு பூரண நலமும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வழங்க வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த நிகழ்வின் போது மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டார தலைவர்கள் கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.