மதுரை மார்ச் 28
மதுரை மண்டலம் ரயில்வே நிர்வாக அலுவலக செய்தி குறிப்பில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
ஹைதராபாத் அருகில் உள்ள கச்சக்குடா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி கச்சக்குடாவில் இருந்து மதுரை ரயில் (07191) ஏப்ரல் 07 முதல் மே 05 வரை திங்கட்கிழமைகளில் இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு புதன் கிழமைகளில் அதிகாலை 01.20 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கத்தில் மதுரையிலிருந்து கச்சக்குடா ரயில் (07192) ஏப்ரல் 09 முதல் மே 07 வரை புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் மதியம் 01.25 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும் இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
எனக் கூறப்பட்டுள்ளது.
மதுரை – கச்சக்குடா ரயில் சேவை நீடிப்பு
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics