மதுரை மே 9,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் வரும் 13ஆம் தேதி துவங்கியது என கோயில் இணை கமிஷனர் /செயல் அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 13ம் தேதி முதல் 22 ம் தேதி நடைபெறும். 13ம் தேதி முதல் 22 ம் தேதி முடிய 1-ஆம் திருநாள் முதல் 9-ஆம் திருநாள் வரை பஞ்ச மூர்த்திகளுடன் மாலை 6 மணி அளவில் திருக்கோயிலிலிருந்து புது மண்டபம் சென்றும் அங்கு பத்தியுலாத்துதல் தீபாராதனை வகையறா முடிந்தும் பின் அங்கிருந்து எழுந்தருளி, நான்கு சித்திரை வீதி சுற்றி திருக்கோயில் சேத்தியாவர். மே 22ஆம் தேதி காலையில் புதுமண்டபம் எழுந்தருளி பகலில் தங்கி வழக்கம் போல் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி சுற்றி கோயில் வந்து சேருவர். மேலும், 23 ம் தேதி முதல் 25ம் தேதி திருஞானசம்பந்தர் திருவிழாவும் 25ம் தேதி காலையில் திருஞானசம்பந்தர் திருநட்சத்திரத்தன்று தங்கப்பல்லக்கில் எழுந்தருளி 63 நாயன்மார்களின் நான்கு ஆவணி மூல தமிழாடுதாவேசந்த உற் வீதி புறப்பாடாகியும் அன்று இரவு திருஞானசம்பந்தர் சுவாமிகள் வெள்ளி கோரதத்தில் எழுந்தருளி நான்கு ஆவணி மூல வீதிகளிலும் திருவீதி உலா புறப்பாடாகும். மே 13 முதல் 25ஆம் தேதி முடிய வசந்த உற்சவம் நடைபெறுவதால், கோயில் சார்பாகவோ உபய தங்கரதம் உபயதிருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.



