சுசீந்திரம் டிச 1
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் பால்குளம் பகுதியில் சுசீந்திரம் சிறப்பு ஆய்வாளர் டேனியல் அருள் சேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் அவர் அதிக லாப நோக்கத்தோடு விற்பனைக்காக மது பாட்டில்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்பு அவரிடம் விசாரணை மேற்கொள்ளும் போது அவர் கன்னியாகுமாரி வடக்கு குண்டல் பகுதியைச் சார்ந்த சண்முகசுந்தரம் 39 என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.