பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் வீர தீர செயல் புரிந்த மாணவிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
தஞ்சாவூர். டிச. 12.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் ,பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் வீர செயல் புரிந்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் உலக எழுத்தறிவு தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வீர தீர செயல் புரிந்த 5 மாணவிகளுக்கு தலா ரூபாய் 10,000 வீதம் ரூபாய் 50 ஆயிரத்திற்கான பரிசுத்தொகைக் கான காசோலைகளும் உலக எழுத்தறிவு தினத்தையொட்டி நடைபெற்ற கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில்மாவட்ட சமூக நல அலுவலர் லதா மற்றும் பேராசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.