மார்த்தாண்டம், மே.22-
நித்திரவிளைய பகுதியை சேர்ந்தவர் ரபேல் (51). அரசு பஸ் டிரைவர். கடந்த 14ஆம் தேதி தடம் எண் 83 என்ற அரசு பஸ்சை இரவு சுமார் 10.45 மணியளவில் இரயுமன்துறை பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்காக ஓட்டி சென்றார். இந்த நேரத்தில் மண்டைக்காடு அருகே கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த மாசிலாமணி (48) என்ற கூலி தொழிலாளி அந்த பஸ்சில் ஏற முயன்றுள்ளார். அப்போது பஸ் போகாது என்று நடத்தினர் கூறி, மாசிலாமணியை கீழே இறக்கிவிட்டுள்ளார்.
தொடர்ந்து பஸ் திருப்ப பின்னோக்கி சென்று கொண்டிருந்தபோது, மீண்டும் மாசிலாமணி பஸ்ஸில் தாவி ஏற முயன்றுள்ளார். இந்த நேரத்தில் தவறி கீழே விழுந்ததில் பஸ் சக்கரம் மாசிலாமணி தொடை பகுதியில் ஏறி உள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாசிலாமணி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.