சென்னை ஏப்ரல் 22
சென்னை, கொளத்தூர், திருப்பதி தங்கவேல் நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம், அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களாகிய பாலகணபதி, பால முருகன், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, விஷ்ணு துர்க்கை, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், நாகர், நாகாத்தம்மன் பிரதிஷ்டை மற்றும் நவக்கிரகங்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து சுவாமி அலங்காரம் தீபாராதனை தீர்த்த பிரசாதம் வழங்குதல் எஜமானர் மரியாதை செலுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளும் அதன் தொடர்ச்சியாக சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த விழாவிற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் அருள்மிகு பவானி அம்மன் திருப்பணி சங்கத்தின் தலைவர் ஆர்.கஜேந்திர பாபு, செயலாளர் எம்.தியாகராஜன், பொருளாளர் ஆர்.கண்ணன், துணைத் தலைவர்கள் பி.மோகன், ஜி.குணசேகரன், துணை செயலாளர்கள் பி.நாராயணன், எம்.இராஜேந்திரன், எம்.இராமச்சந்திரன் மற்றும் ஆலய திருப்பணி சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.