தஞ்சாவூர். அக்.10.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான நாள் விழாவையொட்டி இரத்த தானம் வழங்கிய தன்னார் வலர்கள் மற்றும் அமைப்புகளுக்கு பாராட்டி,சான்றிதழ் கேடயத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்த விழாவிற்கு மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய அமைப்புகள் கல்லூரிகளை பாராட்டி, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். மேலும் மாவட்டத்தில் அதிகமாக 583 யூனிட் இரத்ததானம் வழங்கிய முதல் இடம் வகிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தைக்கு மாவட்ட ஆட்சியர் தலைவர் வழங்கி பாராட்டினார்.
சுகாதாரத்துறை இயக்குனர் (பொ)ஹேமசந்த் காந்தி,மாநகர நலஅலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, மருத்துவர் வேல்முருகன், குருதி பரிமாற்ற சிறப்பு அலுவலர் கிஷோர் குமார், பட்டுக்கோட்டை மருத்துவர் சீனிவாசன், கும்பகோணம் குருதி மருத்துவர் சுகந்தி, சிந்திய உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.