களியக்காவிளை, ஜன. 3 –
மடிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ரேவதி (63). இவருக்கும் பக்கத்து வீட்டுச் சேர்ந்த அப்புகுட்டன், ஓய்வு பெற்ற அரசு பஸ் டிக்கட் பரிசோதகர். இருவருக்கும் இடையே
முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் மூதாட்டி அவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது அப்புக்குட்டன் அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


