மார்த்தாண்டம், டிச. 8 –
கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வினு என்பவர் மகளின் திருமணம் நேற்று நடந்தது. அன்று மாலை விருந்து நிகழ்ச்சிக்காக 4 வேன்களில் கேரள மாநிலம் பாலராமபுரம் என்ற பகுதிக்கு மணமகன் வீட்டுக்கு சென்றனர். இதில் இதில் முதலாவது சென்ற சொகுசு வேனை கலிங்கராஜபுரம் பகுதி சேர்ந்த அபி (28) என்பவர் ஓட்டி சென்றார். அந்த வேனில் 24 பேர் பயணம் செய்தனர்.
கொல்லங்கோடு அருகே மணலி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் ஒரு பைக்கில் கணவன் மனைவி சென்று கொண்டிமுந்தனர். அப்போது அந்த பைக் மீது வேன் மோதியதில் நிலை தடுமாறி பைக், வேன் ஆகியவை சாலையில் கவிழ்ந்தது. இதில் பைக்கில் இருந்த 2 பேரும் படுகாயமடைந்தனர். வேனில் இருந்த மொத்தம் 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து காரணமாக சூழால் – நடைக்காவு சாலையில் சுமார் 2:30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் குறித்தும், டிரைவர் அபி மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



