கிருஷ்ணகிரி: அக் :05:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கணவாய்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலில் புரட்டாசி மாதம் பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து சுவாமியை வழிபட்டு செல்வார்கள். சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை நாள் என்பதால் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் வி.லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.முருகன் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய துணைச் செயலாளர் மேஸ்திரி சண்முகம், கோவிந்தராஜ், ரவி, கோவிந்தன், குமார், காம்ப்ளக்ஸ் என்கின்ற திம்மராயன், கோவிந்தசாமி, வி.பெருமாள், கருத்தப்பன், டாட்டா ஏசி திம்ராயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.சின்னராஜ், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் எஸ்.சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ஓம்சாந்தி சங்கர், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திம்மராயன், மாவட்ட நிர்வாகி பார்க்சிவா, வல்லரசு, பார்க்கோவிந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். விழா ஏற்பாட்டினை அரசுப்பள்ளி ஊராட்சி சேர்ந்த தேமுதிகவினர் செய்திருந்தனர்.