கிருஷ்ணகிரி மே 15
கஞ்சனூர் கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழாவில் திமுக மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் கந்தசாமி கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து கல்லாவி அருகே கஞ்சனூர் கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழா நடந்தது.
இத்திருவிழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு திமுக மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் கந்தசாமி கலந்து கொண்டு காளியம்மன் தேர் வடத்தை இழுத்து துவக்கி வைத்தார்.
தேர் ஊர்வலமாக மேளதாளத்துடன் ஊர் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து இரவு தீமிதி திருவிழாவும் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மை அறிவழகன், கோவில் தர்மகர்த்தா, BlA2. ராஜா மணி, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் மாது, கிளை கழக செயலாளர் செல்வராஜ், ஜனார்த்தனன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.