பிப்:11
டிசைன் ஸ்பிரிங் பிசினஸ் நிறுவனத்தின் சார்பில் இயற்கை காப்போம் விழிப்புணர்வு குறும்பட நிகழ்ச்சி விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்பு!
_______
டிசைன் ஸ்ப்ரிங் பிசினஸ் நிறுவனத்தின் சார்பில் இயற்கை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்பட நிகழ்ச்சி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள சவேரா ஹோட்டலில் பசுமை பற்றிய புரிந்துணர்வு கருத்தரங்கம் மற்றும் வருங்காலத்தில் இயற்கை சீற்றத்தினால் நாட்டில் நாம் எதிர் நோக்க விற்கும் சவால்களை விளக்கும் விழித்தெழு என்ற குறும்பட காணொளியும் நடைபெற்றது. விழாவில் இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பல்வேறு நாட்டில் இருந்து வந்திருந்த அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பொதுமக்களுக்கு புரியும்படி விளக்கிக் கூறினர் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜெயலட்சுமி மற்றும் ஓமன் நேஷனல் யூனிவர்சிட்டி பேராசிரியரும் திரைப்பட நடிகருமான டாக்டர் தர்மாசா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இயற்கை ஆர்வலர்கள் சினிமா பிரபலங்கள் பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை சத்தியமித்திறன் ஊடகம் செய்து முடித்தனர்.